Showing posts with label News in Tamil. Show all posts
Showing posts with label News in Tamil. Show all posts

டைம்ஸ் இதழின் புகழ் பெற்ற 25 சிறந்த விளையாட்டுப் பட வரிசையில் லகான்

டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகப் புகழ் பெற்ற 25 சிறந்த விளையாட்டுப் படங்களின் வரிசையில் இந்தியாவின் லகானும் இடம் பெற்றுள்ளது. ஆமிர்கானின் நடிப்பில் உருவான இப்படம், கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுப் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த வெளிநாட்டுப் பட வரிசையில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி படைத்து சாதனை படைத்ததாகும்.

உலகப் புகழ் பெற்ற விளயாட்டை மையமாகக் கொண்ட 25 படங்களை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் லகானுக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. 2001ல் வெளியான படம் லகான். ஆமிர்கான் தயாரிப்பில் உருவான இப்படத்தை ஆசுதோஷ் கோவரிகர் இயக்கியிருந்தார். இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் கதை நடப்பது போல படமாக்கியிருந்தனர்.

வெள்ளைக்காரர்களுக்கும், ஒரு சாதாரண கிராமத்து இளைஞர்களுக்கும் இடையிலான போட்டியே இப்படத்தின் கதைக்களமாகும்.

இந்தப் படம் குறித்து வெகுவாக புகழாரம் சூட்டியுள்ளது டைம்ஸ். படத்தின் கதையைப் பாராட்டியுள்ள டைம்ஸ், படத்தின் இசையமைப்பாளரா ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் விசேஷமான பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

இந்தப் படப் பட்டியலில் 1998ல் வெளியான தி பிக் லெபோவ்ஸ்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாடி அன்ட் சோல், பிரேக்கிங் அவே, புல் டுர்ஹாம், கேடிஷேக் ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை: பாரிஸ் ஹில்டன்

மும்பை: பாரிஸ் ஹில்டனுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கை ஆசையாக இருக்கிறதாம். நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம்.

நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

மும்பையில் தங்கியுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் வரத் தான் செய்கிறது. எனக்கும் பாலிவுட்டில் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால் நல்ல கதை இன்னும் கிடைக்கவில்லை. அதற்காகத் தான் காத்திருக்கிறேன் என்றார்.

நீங்கள் நடத்தும் பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோவை இந்தியாவில் நடத்தலாமே என்று கேட்டதற்கு, எனக்கும் ஆசை தான். ஆனால் நான் தற்போது பிசியாக உள்ளேன் என்றார்.

பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோ கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்டது. பின்னர் அது ஹிட்டானவுடன் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் துவங்கப்பட்டது.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் பாரிஸ் கலந்துகொள்ளப்போகிறார் என்றும், பாலிவுட் நட்சத்திரங்கள் அவருக்கு பார்ட்டி கொடுக்கப்போகிறார்ள் என்றும் பேசப்படுவது பற்றி கேட்டதற்கு,

இது எல்லாம் வதந்திகள். நான் இங்கு வியாபார விஷயமாகவும், எனது ரசிகர்களை சந்திக்கவும் தான் வந்துள்ளேன்.

பின்னர் பாரிஸ் தனது தயாரிப்பான கைப்பைகள், அழங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்தினார்.

நீச்சல் கற்கும் ஷாலினி!

நடிகை ஷாலினி பேட்மிண்டன் விளையாடுவதோடு சேர்த்து தற்போது நீச்சலும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

நடிகை ஷாலினி அஜீத் குமாரை மணந்த பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார். பின்னர் பேட்மிண்டன் போட்டிகளில் கவனம் செலுத்தத் துவங்கினார். இந்தப் போட்டியில் பல்வேறு பரிசுகளும் வாங்கியுள்ளார். அண்மையில் சிவகாசியில் நடந்த மாநில அளிவிலான பேட்மிண்டன் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஷாலினி பரிசு பெற்றார்.

குழந்தை அனோஷ்காவையும், குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு விளையாட்டிலும் கவனம் செலுத்துகிறார். தற்போது கூடுதலாக நீச்சல் கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.

ஷாலினிக்கு பேட்மிண்டன், அஜீத் குமாருக்கு பைக் ரேஸ். நல்ல ஜோடிதான்.

ஃபேஷன் ஷோக்களுக்கு பட்டுப்புடவையில் வரும் ஸ்நேகா!

நடிகை ஸ்நேகா ஃபேஷன் ஷோக்களுக்கு பட்டுப்புடவையில் வந்து அசத்துகிறாராம். அதற்காக புதுப் புது டிசைன்களில் பட்டுப்புடவைகள் வாங்கிக் குவிக்கிறாராம்.

நடிகை ஸ்நேகா ஃபேஷன் ஷோக்களில் அதிகம் கலந்து கொள்கிறார். ஃபேஷன் ஷோ என்றால் மாடர்ன் டிரஸ்ஸில் வருபவர்களுக்கு மத்தியில் ஸ்நேகா பட்டுப்புடவையில் சென்று அசத்துகிறார். அதற்காக வித, விதமாக பட்டுப்புடவைகள் வாங்கிக் குவிக்கிறாராம்.

அது காஸ்ட்லியாக இருந்தாலும் சரி, பிடித்திருந்தால், விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிவிடுகிறார். ஒவ்வொரு ஷோவுக்கும் ஒரு டிசைன் புடவையில் வந்து கலக்குகிறார்.

தனக்கு எது கச்சிதம் என்பதை புரிந்து கொண்டு அதையே விரும்பி அணிகிறார் ஸ்நேகா.

தப்பேயில்லை...!

அப்பாக்கள் வரலையே: ஸ்ருதி, ஐஸ்வர்யா வருத்தம்!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் 3 படப்பிடிப்பிற்கு தங்களது அப்பாக்கள் ரஜினி மற்றும் கமல் வரவலில்லையே என்று அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனராம்.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இதில் கதாநாயகனாக அவரது கணவர் தனுஷ் நடிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக தனது தோழி ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்துள்ளார்.

ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் செட்டில் இருப்பதால் அவர்களது தந்தைகள் அதாவது ரஜினியும், கமலும் படப்பிடிப்புக்கு வருவார்கள் அவர்களை ஒன்றாகப் பார்த்துவிடலாம் என்று படக்குழுவினர் ஆர்வமாக உள்ளனர்.

அதேபோல தங்கள் அப்பாக்கள் நிச்சயம் படப்பிடிப்புக்கு வந்து தாங்கள் எப்படி பணிபுரிகிறோம் என்பதைப் பார்ப்பார்கள் என்று ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் கூட மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் உள்ளனர்.

படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாட்களாகியும் அப்பாக்கள் வராததால் மகள்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

அட, இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க...!

இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்தி-டென்ஷனில் சமந்தா

தான் ஒரு பிரபல இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து தமிழ் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் நடிகை சமந்தா.

கௌதம் மேனனின் தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறப்பாக நடித்து அசத்தியவர் நடிகை சம்ந்தா. இவரைத்தான் அஜீத்துடன் நாயகியாக போட்டு துப்பறியும் ஆனந்த் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் மேனன். ஆனால் அப்படம் டிராப் ஆகவே தமிழுக்கு வரும் வாய்ப்பு சமந்தாவுக்குத் தள்ளிப் போனது.

இருந்தாலும் சமந்தாவை விட்டு விடாத கெளதம் மேனன் தற்போது அவரை தனது படத்தில் மீண்டும் நடிக்க வைத்து தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். 'நீதானே என் பொன்வசந்தம்' என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா.

இந்நிலையில் சமந்தா யாரோ ஒரு பிரபல இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பத்திர்க்கைகளில் செய்தி வெளியாகின. அட என்னடா இது இப்படி எழுதியிருக்கிறார்களே என்று சமந்தா கடுப்பாகிவிட்டாராம்.

இதையடுத்து தன்னைப் பற்றி இப்படியெல்லாம் எழுதிய மீடியா அதிலும் குறிப்பாக தமிழ் மீடியாக்காரர்களிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாராம்.

எத்தனை நாளைக்கு இப்படி தலைமறைவாக இருக்க முடியும் சமந்தா?

தேர்தல் நடைபெறும் நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன்?-'குத்து' ரம்யாவுக்கு நோட்டீஸ்!

தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கிருஷ்ணா, வெளியுறவு அமைச்சராக இருக்கிறார். இவரது வழியில் இப்போது குத்து ரம்யாவும் அரசியலில் குதித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸில் இணைந்த அவர் சாந்திநகர் பூத் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்வு பெற்றார். தற்போது மாநிலத் தலைவர் பதவிக்குக் குறி வைத்துள்ளார்.

இதற்காக ஆதரவு திரட்டும் வகையில் பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுத்து அங்கு புயலைக் கிளப்பியுள்ளார். ரம்யாவின் இந்த பேட்டி அரசியல், மாநில காங்கிரஸாரை, குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குறி வைத்திருப்போரை எரிச்சலுக்குள்ளாக்கியஉள்ளது. இதையடுத்து ரம்யாவைத் தட்டி வைக்குமாறு அவர்கள் தேர்தல் அதிகாரிக்கு புகார்களை அனுப்பினர்.

இதையடுத்து தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பேட்டி கொடுப்பது ஏன் என்று விளக்கம் கேட்டு குத்து ரம்யாவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

'தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்

மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.

ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத்.

ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு, 'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக கிசுகிசுக்கிறார்கள்.

'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்... விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!

சினேகா, த்ரிஷா, ஸ்ரேயாவுக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!

15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தி உறுப்பினராகாவிட்டால், தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாது என நடிகைகள் சினேகா, த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோருக்கு தெலுங்கு நடிகர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று கடந்த வாரம் சென்னையில் கூடிய நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 30-ந்தேதிக்குள் உறுப்பினராக கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இது போல் தெலுங்கு நடிகர் சங்கமும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பளம் அதிகம் என்பதால் இந்தி, தமிழ், மலையாள நடிகைகள் பலர் தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் இதுவரை உறுப்பினராகவில்லை இதையடுத்து உறுப்பினராகாத நடிகைகள் பட்டியலை தெலுங்கு நடிகர் சங்கம் தயார் செய்தது.

அவர்களுக்கு இன்னும் 15 நாட்களில் உறுப்பினராக வேண்டும் என்று கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகைகள் த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா, நித்யாமேனன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இவர்கள் தமிழ் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி விட்டனர். ஆனால் தெலுங்கில் இன்னும் உறுப்பினர் ஆகவில்லையாம். 15 நாட்களுக்குள் உறுப்பினராகாவிட்டால் தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியாவுக்கேத் திரும்புகிறேன்- மாதுரி தீட்சித்


அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் முன்னாள் இந்தித் திரையுலக கனவுக் கன்னி மாதுரி தீட்சித் மீண்டும் இந்தியாவுக்கேத் திரும்பி வர தீர்மானித்துள்ளாராம்.

44 வயதாகும் மாதுரி தீட்சித் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்தித் திரையுலகைக் கலக்கியவர். மிகச் சிறந்த நடனக்கலைஞராக, அட்டகாசமான நடிகையாக அறியப்பட்டவர். ஐஸ்வர்யா ராயின் எழுச்சிக்கு முன்னர் மாதுரியின் நடிப்பிலும், நடனத்திலும் மயங்கிக் கிடந்தனர் இந்தித் திரையுலக ரசிகர்கள்.

1999ம் ஆண்டு அமெரிக்காவின் டென்வரில் வசித்து வரும் டாக்டர் ஸ்ரீராம் மாதவ் நெனேவை மணந்து கொண்டு அமெரிக்காவில் போய் செட்டிலானார் மாதுரி.

இரு குழந்தைகளுக்குத் தாயான மாதுரி தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவுக்கேத் திரும்பவுள்ளாராம். இங்கு ஒரு டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றும் மாதுரி, தனக்கும், தனது குடும்பத்துக்கும் வசதியாக, இந்தியாவிலேயே தங்கி விட தீர்மானித்துள்ளாராம்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், எனது ரசிகர்களுக்கு, நாங்கள் இந்தியாவுக்கேத் திரும்பவுள்ளோம். மீண்டும் தாயகம் திரும்புவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த மாதுரி 2007ல் ஆஜா நச்லே என்ற படத்தில் மீண்டும் நடித்தார். இப்போது அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இதை மனதில் கொண்டுதான் மீண்டும் இந்தியாவுக்கு வரும் முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.